கேப்ஸிகம் சட்னி
தேவையான பொருட்கள்:
கேப்ஸிகம் ( குடைமிளகாய்) - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1
கறிவேப்பில்லை - 4 இலை
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் குடைமிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக வெட்டி கொள்ளவும்.
ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெட்டி வைத்துள்ள குடைமிளகாயினை போட்டு நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.
பின் அதே கடாயில் வெட்டி வைத்துள்ள தக்காளியை போட்டு வதக்கவும்.
வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் தக்காளியை சிறிது நேரம் ஆறவிட்டு பிறகு மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்.
வேறு கடாயில் மீதம் உள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பின் அதில் காய்ந்த மிளகாய் மற்றும் சீரகம் சேர்க்கவும்.
பின் அதில் வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய உடன் அதில் உப்பு மற்றும் அரைத்த விழுதினை போட்டு 2 அல்லது 3 நிமிடம் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
குறிப்புகள்:
இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.