கீரை புளி சட்னி
0
தேவையான பொருட்கள்:
தண்டு கீரை - 1 கப்
வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1 கப்
கெட்டியாக கரைத்த புளிக் கரைசல் - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கீரை, புளி, உப்பு சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும்.
பின் ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
பின் வேறு ஓரு கடாயில் எண்ணெய், கடுகு, வெங்காயம், பெருங்காயம் தாளித்து அரைத்த கீரையுடன் சேர்க்கவும்.
சுவையான சட்னி ரெடி.