கத்தரிக்காய் சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 3
மிளகா வத்தல் - 8
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி தாளிக்க
செய்முறை:
கத்தரிக்கா, வெங்காயம், தக்காளியை பொடிசாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி முதலில் மிளகாயை வறுத்துபிறகு காய்களையும் சேர்த்து சுருள வதக்கவும்.
நன்கு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.