கடலைமாவு சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைமாவு - 3 தேக்கரண்டி

சிறிய வெங்காயம் - 1

பச்சைமிளகாய் - 3

கடுகு - கால் தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - சிறிதளவு

செய்முறை:

கடலைமாவுடன் தண்ணீர் ஊற்றி நன்றாக கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகையும் உளுத்தம்பருப்பையும் வறுத்துக் அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வாணலியில் கரைத்து வைத்த கடலைமாவையும் ஊற்றி உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: