கடப்பா சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 5

பூண்டு - 10 பல்

பொட்டுக்கடலை - 50 கிராம்

சோம்பு - 1/4 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்க வேண்டும். பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைக்கவும். தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.

வெங்காயம் பூண்டு சேர்த்து சிவக்க வதக்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

பிறகு கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதித்து சிறிது கெட்டியானதும் இறக்கவும்.

குறிப்புகள்:

இட்லி தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.