இருகடலை சட்னி
1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1/2 கப்
பொரிக்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - ஒரு துண்டு
புளி - ஒரு சின்ன துண்டு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு
சீரகம்
உளுத்தம்பருப்பு
கடலைப் பருப்பு
எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை:
எண்ணெய் விட்டு காய்ந்ததும் வேர்க்கடலை, பொரிக்கடலை, பச்சை மிளகாய், புளியை வறுத்து வைக்கவும்.
இதில் துருவிய தேங்காய், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தேவையானால் எண்ணெய் விட்டு தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.