இனிப்பு சட்னி
0
தேவையான பொருட்கள்:
பேரீச்சைப்பழம் - 8
கிஸ்மிஸ் பழம் (உலர்ந்த திராட்சை) - 15
புளி - எலுமிச்சைப்பழம்tஒரு கொட்டை பாக்கு அளவு
வெல்லம் - ஒரு பிட்டு
வறுத்த சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
செய்முறை:
முதலில் கிஸ்மிஸ் பழம், பேரீச்சைப்பழம், புளியை கொட்டை நீக்கி விட்டு மூன்றையும் கழுவி ஒரு பவுளில் வைத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வேக வைத்து வெளியில் எடுத்து ஆறவைக்க வேண்டும்.
ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு அதனுடன் வெல்லம், உப்பு, சீரகம், மிளகாய் தூள் சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும்.