இஞ்சி புளி சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிஞ்சு இஞ்சி (துண்டு துண்டாக நறுக்கியது) - 1 கிலோ

புளி - 250 கிராம்

வெல்லம் - 50 கிராம்

சிவப்பு மிளகாய் - 25 கிராம்

சீரகம் - 1 1/2 தேக்கரண்டி

கடுகு - 2 தேக்கரண்டி

கட்டிப் பெருங்காயம் - சிறிது

எண்ணெய் - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியில் அதிகம் தண்ணீர் விடாமல் நல்லா கரைக்கவும்

வாணலியில் எண்ணெய் விடாமல் சிவப்பு மிளகாய்,சீரகத்தை யும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

இஞ்சியை மிக்ஸியில் நன்றாக, அதிகம் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.

நாரை நீக்க ரவை ஜல்லடையில் இஞ்சி சாரை வடிகட்டவும்.

வறுத்த சீரகம்,மிளகாயை நன்றாக மாவு போல் அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை வறுத்து பின் தனியே எடுத்து நசுக்கிக் கொள்ளவும்.

அதே வாணலியில் கடுகு போட்டு தாளித்து, இஞ்சி, புளி, உப்பு, பொடித்த மிளகாய் பொடி, பெருங்காயம், வெல்லம் எல்லாவற்றையும் போட்டு நன்றாக கிளறவும்.

நன்றாக சட்னி மாதிரி கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

ஆறிய பிறகு ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டில் அல்லது எவர்சில்வர் கண்டெய்னரில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்தால் 2 வாரம் வரை நன்றாக இருக்கும்.