ஆந்திரா பீர்கங்காய் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீர்கங்காய்- 1/4 கிலோ

மல்லி விதை- 1 தேக்கரண்டி

ஜீரகம்- 11/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 5

புளி - சிறிதளவு

எண்ணை- 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பீர்கங்காயை தோல் சீவி சிறியதாக நறுக்கி கொள்ளவும்

வாணலியில் எண்ணை விட்டு மல்லி விதை,ஜீரகம் போட்டு பொரிந்தவுடன் பீர்கங்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பீர்கங்காய் வதங்கியதும் ஆற விடவும். உப்பு, புளி சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: