வெள்ளை வெஜ் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேரட் - 1

பீன்ஸ் - 10

காலி ஃப்ளவர் - சிறிதளவு

காய்ந்த பட்டாணி - 1/4 கப்

உருளை கிழங்கு - 1

வெங்காயம் - 1

தக்காளி - 2

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 1/2 கப்

பச்சை மிளகாய் - 4

பூண்டு - 2 பல்

சோம்பு - 1/4 தேக்கரண்டி

பட்டை - 2 சிறிய துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 1

முந்திரி - 5

செய்முறை:

பட்டாணியை 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். மற்ற காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின் எல்லாவற்றையும் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, பச்சைமிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.

தேங்காய்த்துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும். பின் தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் தக்காளியை போட்டு வதக்கவும்.

தக்காளி வதங்கியவுடன் அரைத்த விழுதை போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின் வேகவைத்த காய்கறிகள், உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும். கடைசியில் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: