முட்டை குருமா (6)

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

பூண்டு - 10 பல்

காய்ந்த மிளகாய் - 7

தேங்காய் துருவல் - 1/2 மூடி

தனியா - 2 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிளகாய், தனியா, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.

உருளைக்கிழங்கு, முட்டையை வேக வைத்து, தோல் உரித்து, 4 துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளிக்கவும்.

பூண்டு நன்கு வதங்கிய பின், அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும், நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு, முட்டையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பரிமாறவும.

குறிப்புகள்: