பச்சை வெஜ் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைக்க:

உருளை - 1

கேரட் - பாதி

கருணைக்கிழங்கு - ஒரு சிறிய துண்டு

காலிஃப்ளவர் - ஆறு பூக்கள்

பட்டாணி - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

அரைக்க - 1:

பட்டை - ஒரு சிறுத் துண்டு

கிராம்பு - 1

தனியா - 1/4 தேக்கரண்டி

இஞ்சி - ஒரு சிறு துண்டு

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி - 1/4 கட்டு

பூண்டு - 1

தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி முழுவதும்

அரைக்க - 2:

முந்திரி - 4

வறுத்த வேர்கடலை - 4

வெள்ளை எள் - 1/4 தேக்கரண்டி

கசகசா - 1/4 தேக்கரன்டி

சோம்பு - 1/4 தேக்கரன்டி

தாளிக்க:

பட்டர் - 2 தேக்கரண்டி

பட்டை - சிறுத் துண்டு

கிராம்பு - 1

கறிவேப்பிலை - ஆறு இதழ்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

காய்கறிகளை கழுவி விட்டு நறுக்கி வைக்கவும்.

அரைக்க கொடுத்துள்ள இரண்டையும் தனித்தனியாக அரைக்கவும்.

முதலில் பொடி செய்ய வேண்டிய பொருட்களை போட்டு அரைத்து விட்டு பின்னர் மற்ற பொருட்களை அரைக்கவும்.

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

அதன் பிறகு அரைக்க கொடுத்துள்ள முதல் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கிளறி விட்டு பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.

இப்பொழுது வெந்த காய்கறிகளை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.

கடைசியில் இரண்டாவதாக அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து சேர்த்து தீயின் அளவை மிதமாக வைத்து சிறிது நேரம் கொதிக்க விட்டு பின்னர் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதில் கொத்தமல்லி தழை இன்னும் சேர்ப்பதாக இருந்தால் சேர்த்து கொள்ளலாம், காரம் விரும்புவோர் இன்னும் இரண்டு பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

இதை ஆப்பம், சப்பாத்தி, இடியாப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.