கோழிக்கறி குருமா

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 1 கிலோ

பச்சை மிளகாய் - 5

வெங்காயம் - 3

தக்காளி - 2

தேங்காய், கசகசா விழுது - 3 மேசைக்கரண்டி

பட்டை - ஒரு அங்குலத் துண்டு

கிராம்பு - 3

இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி

மிளகாய்த் தூள் - 2 1/2 மேசைக்கரண்டி

மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி

சீரகத் தூள் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1/4 கப்

உப்பு - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயைக் இரண்டாகக் கீறிக்கொள்ளவும்.

தேங்காய், கசகசா இரண்டையும் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

தக்காளியைத் சிறு துண்டங்களாக நறுக்கி எடுக்கவும்.

மேலே குறிப்பிட்டுள்ள மசாலாத் தூள்கள், உப்பு, எண்ணெய் ஆகியவற்றைத் தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு 30 நொடிகள் வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கினத் தக்காளித் துண்டங்களைப் போட்டு சுமார் 5 நிமிடம் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கவேண்டும்.

தக்காளி சுருள வதங்கியவுடன், கோழிக்கறியை போட்டு பிரட்டி விட்டு, உப்பு போட்டு கிளறி வேகவிடவும்.

சுமார் இரண்டு நிமிடங்கள் கறியை வேகவிட்டு பிறகு மிளகாய்த்தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் அனைத்தையும் சேர்க்கவும்.

மசாலாத்தூள் கறியுடன் நன்கு சேருமாறு எல்லாவற்றையும் ஒன்றாய் சேர்த்து நன்கு கிளறி விடவும். சுமார் மூன்று நிமிடங்களுக்கு நன்கு கிளறிவிட்டு வேகவிடவும்.

பிறகு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி மேலும் மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும். மசாலா நன்கு சேர்ந்து நீர் சற்று சுண்டி வரும்.

இப்போது தேங்காய் கசகசா விழுது சேர்த்து, மேலும் கால் கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு மூடி விடவும்.

மூடி வைத்து சுமார் 7 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். ஏழு நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும். மூடியை உடனே திறக்க வேண்டாம்.

மேலும் 5 நிமிடங்கள் மூடியைத் திறக்காமல் வைத்திருந்து, பிறகு திறந்து எடுத்துப் பரிமாறவும்.

குறிப்புகள்: