சாதம் பிரட் போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்

பிரட் - 4 ஸ்லைஸ்

கடலை மாவு - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 2 பல்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - 1 கைப்பிடி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பூண்டு நசுக்கி வைக்கவும்.

பெரிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

சாதத்தை நன்கு மசித்து கொள்ளவும்.

பிரட்டை நீரில் நனைத்து, பிழிந்து, மசித்த சாதத்துடன் சேர்க்கவும்.

கடலை மாவு, நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்தில் பிசையவும்.

வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: