ஹஜ்ஜீர் பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 3 கப்

மைதா - அரை கப்

முட்டை - 2

சீனி - ஒன்றேகால் கப்

கரூர் நெய் (அ) டால்டா - 75 கிராம்

தேங்காய் பால் - கால் கப் (முதல் பால் மட்டும்)

பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க

உப்பு - சிறிது

செய்முறை:

முட்டையுடன், உப்பு மற்றும் சீனியை சேர்த்து நன்கு சீனி கரையும் வரை கலக்கவும். பெருஞ்சீரகத்தைப் பொடி செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவையும், மைதாவையும் சலித்துக் கொள்ளவும். அதோடு பெருஞ்சீரகப் பொடி சேர்த்து, நெய்யை உருக்கி ஊற்றி கரண்டியால் நன்கு ஆறும் வரை கலக்கவும். அதில் முட்டை, சீனி கலவையையும், தேங்காய் பாலையும் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

சிறிது மாவை எடுத்து படத்திலுள்ளது போல் கையால் கால் இன்ச் அளவிற்கு தட்டிக் கொள்ளவும்.

அச்சுகளால் தட்டிய மாவை விரும்பிய வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான ஹஜ்ஜீர் பணியாரம் தயார்.

குறிப்புகள்: