வஞ்சிரமீன் போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வஞ்சிர மீன் - 200 கிராம்

கடலை மாவு - 100 கிராம்

அரிசி மாவு - 100 கிராம்

பெரிய வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 10

கறிவேப்பிலை - 5 கொத்து

பூண்டு - 10 பல்

பெருஞ்சீரகத்தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

ஆப்ப சோடா - ஒரு ஸ்பூன்

உப்பு - 3/4 ஸ்பூன்

செய்முறை:

முதலில் மீன் துண்டுகளை சிறிது மஞ்சள் தூள், கால் ஸ்பூன் உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ள வேண்டும்.

வேகவைத்த மீனில் தண்ணீர் இருந்தால் அதை தனியாக வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மீனின் முட்களை நீக்கி அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை போட வேண்டும்.

மேலும் பெருஞ்சீரகத்தூள், ஆப்ப சோடா, மீதி உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ளவேண்டும்.

கலவை உருண்டை போடும் பதத்தில் இல்லையென்றால் மட்டும் ஏற்கனவே வடித்து வைத்த தண்ணீரை தேவைக்கு சேர்த்துக் கொள்ளலாம்.

பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சூடான வஞ்சிரமீன் போண்டா தயார். இது மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது.

குறிப்புகள்: