பொட்டேட்டோ சாப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 300 கிராம்

எண்ணெய் - 100 மில்லி

உப்பு - தேவைக்கு

சில்லி பவுடர் - அரை ஸ்பூன்

மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

சீரகத்தூள் - கால் ஸ்பூன்

சோம்புத்தூள் - கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

இஞ்சி பூண்டு - அரை ஸ்பூன்(விருப்பப்பட்டால்)

முட்டை - 1 அல்லது மைதாமாவு 2 டேபிள் ஸ்பூன்.

ப்ரெட் க்ரெம்ப்ஸ் - 1 கப்

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமான துண்டுகளாக்கி உப்பு, கொடுத்த மசாலா தூள்களை சேர்த்து ஊற வைக்கவும். அதனை கொஞ்சம் எண்ணெய் விட்டு நாண்ஸ்டிக் பேனில் பிரட்டி பிரட்டி ஓரளவு வேக வைத்து வைக்கவும்.

பின்பு முட்டையை நன்கு பீட் செய்து அதில் உருளைகிழங்கை டிப் செய்து ப்ரெட் கிரெம்ப்ஸ் பிரட்டி ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைத்து பொரித்து எடுக்கவும்.முட்டை சேர்க்காதவர்கள் மைதாவை கெட்டியாக கரைத்து கிழங்கை டிப் செய்து ப்ரெட் கிரெம்ப்ஸ் பிரட்டி பொரித்தெடுக்கலாம்.

இப்பொழுது சுவையான பொட்டட்டோ சாப்ஸ் ரெடி.

குறிப்புகள்: