பிர்னி

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உடைத்த சம்பா கோதுமை - 2 கப்

சீனி - 3 கப்

ஓட்ஸ் - ஒன்றரை கப்

முந்திரி - 12

நெய் - ஒரு மேசைக்கரண்டி

ஏலக்காய் - 3

பால் - 2 கப்

செய்முறை:

உடைத்த சம்பா கோதுமை கடைகளில் கிடைக்கும். கோதுமை ரவை என்று கேட்டு வாங்கவும்.

உடைத்த சம்பா கோதுமையில் 3 கப் தண்ணீர் ஊற்றி சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஊற வைத்த கோதுமையை தண்ணீருடன் ஊற்றி வேக வைக்கவும்.

சற்று கொதிக்க ஆரம்பித்ததும் இரண்டும் கப்பில் ஒரு கப் பால் மட்டும் ஊற்றி இடையில் கிளறி விட்டு 5 நிமிடங்கள் வேக விடவும்.

பிறகு அதில் ஓட்ஸ் போட்டு 2 நிமிடம் கிளறிவிட்டு வேகவிடவும். கட்டி விழாமல் இருக்குமாறு தொடர்ந்து கிளறவும்.

ஓட்ஸ் நன்கு கரைந்தவுடன் மீதமுள்ள ஒரு கப் பாலைச் சேர்க்கவும்.

அத்துடன் சீனி சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். ஏலக்காயை பொடி செய்து அதில் சேர்த்து விடவும்.

வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும், முந்திரியை உடைத்துப் போட்டு, வறுத்து பிர்னியில் சேர்த்து கிளறவும்.

முந்திரி சேர்த்து சில நொடிகளிலேயே இறக்கிவிடவும். நாவில் நீர் ஊறச் செய்யும் பிர்னி ரெடி.

குறிப்புகள்: