பிசின் அரிசி சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிசின்அரிசி(புட்டரிசி) - 2 கப்

தேங்காய்த்துருவல் - 2 கப்

சர்க்கரை - 1 கப்

ஏலப்பொடி - 1 சிட்டிகை

நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

பிசின் அரிசியை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் ஒரு துணியில் பரப்பி, இட்லிபானையில் வேக விடவும்.

நன்கு வெந்ததும் சற்று ஆற விடவும். ஓரளவு ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்

சர்க்கரை, ஏலப்பொடி, தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து பிசைந்து, பிசின் அரிசியை சேர்த்துக்கலந்து சாப்பிடவும்.

குறிப்புகள்: