பிசின் அரிசி அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிசின் அரிசி(கருப்பு) - ஒரு கப்

சீனி - ஒரு கப்

முந்திரி - 10

தோல் நீக்கிய பாதாம் பருப்பு - 10

வெள்ளரி விதை - 25 கிராம்

பிஸ்தா - 25 கிராம்

நெய் - ஒரு கப்

உப்பு - ஒரு சிட்டிகை

ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அரிசியை 3 மணிநேரம் ஊற வைத்து கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு அடிகனமான வாய் அகன்ற பாத்திரத்தில் அரைத்தமாவையும் சீனி, உப்பை போட்டு அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

கொஞ்சம் கெட்டியானதும் அதில் ஏலத்தூள் நெய்யில் பாதி சேர்த்து கை விடாமல் கிளறவும்.

பின்பு மீதமுள்ள நெய்யில் அனைத்து பருப்புகளையும் பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும். பின்பு நன்கு கிளறி நெய் பிரிய ஆரம்பித்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்.

இதுவே பிசின் அரிசி அல்வா. சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: