தேங்காய் பால் சோறு

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பொன்னி புழுங்கல் அரிசி - அரை படி

தேங்காய் - ஒன்று (சிறிய மூடி)

வெங்காயம் - நான்கு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து தேக்கரண்டி

கொத்தமல்லி - அரை கட்டு

புதினா - கால் கட்டு

பச்சை மிளகாய் - நான்கு

உப்பு - தேவைக்கு

வெந்தயம் - கால் தேக்கரன்டி

எண்ணெய் - மூன்று தேக்கரண்டி

பட்டை - இரண்டு துண்டு

ஏலம் - ஒன்று

கிராம்பு - மூன்று

செய்முறை:

அரிசியுடன், வெந்தயம் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

தேங்காயை துருவி பாலெடுக்கவும்.

ஒரு கப்புக்கு இரண்டு கப் வீதம் தேவை.

குக்கரில் அல்லது ரைஸ் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும் சிவக்க வேண்டாம்.

அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி, பாதி கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் போட்டு வதக்கி தேங்காய் பாலை அளந்து ஊற்றி கொதிக்க விட்டு கொதித்ததும் ஊறிய அரிசியை போட்டு, உப்பும் சேர்த்து நல்ல கொதிக்கும் போது மீதி கொத்தமல்லி, புதினாவை போட்டு மூடி போட்டு உடனே வெயிட் போட வேண்டியது.

தீயை மிதமாக வைக்கவும். நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்: