கொத்துக்கறி முட்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு இறைச்சி கொத்தியது - கால் கிலோ

முட்டை - 2

தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 2

சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்

சீரகத்தூள் - அரைஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - கால் கிலோ

தக்காளி - ஒன்று

மல்லி இலை - சிறிது

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

முதலில் கறியை நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி இலை நறுக்கி வைத்து கொள்ளவும். தேங்காய் முந்திரி அரைத்து கொள்ளவும்.

பின்பு குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்கி, தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, சில்லி பவுடர், சீரத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அத்துடன் கொத்துகறி சேர்த்து வதக்கி மூடி 3 விசில் வைக்கவும்.

அரைத்த தேங்காயுடன், நறுக்கின வெங்காயம், முட்டை சேர்த்து கலந்து வைக்கவும்.

கறி வெந்தவுடன் முட்டை தேங்காய் வெங்காய கலவையை சேர்த்து பிரட்டி கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் போட்டு சுமார் கால் மணி நேரம் வைக்கவும்.

வெங்காயம் வெந்து முட்டையும் தேங்காயும் பார்க்க கறியுடன் கசகசா சேர்த்தது போல் இருக்கும். தண்ணீர் இருந்தால் வற்ற வைக்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான கொத்துக்கறி முட்டை ரெடி. இதனை சாதம், சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: