ருலங் அலுவா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கப்

ப்ரவுன் சர்க்கரை - 1/4 கப்

நெய் அல்லது வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

பேரீச்சம் பழம் - 5

முந்திரி - 5

வெனிலா எஸன்ஸ் - 1/2 தேக்கரண்டி

பால் - 1/2 கப்

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

பாலை கொதிக்க வைத்து சூடாக வைக்கவும்.

முந்திரி மற்றும் பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ரவையை கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும்.

இதில் வெண்ணெய் விட்டு கலந்து பின் சர்க்கரை, பொடியாக நறுக்கிய பேரீச்சை, முந்திரி எல்லாம் கலந்து 2 நிமிடம் கிளறவும்.

பின் சூடான பாலை விட்டு கலந்து மூடி விடவும்.

5 நிமிடம் சிறு தீயில் வைத்து கிளறி எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி அழுத்தி விடவும். ஆறியதும் துண்டுகளாக்கவும்.

குறிப்புகள்: