மிக்ஸ்டு ஃப்ரூட் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 1

பப்பாளி - 1/4

பேரீட்சம் பழம் - 5

வாழைப்பழம் - 1

சர்க்கரை - தேவைக்கு

செய்முறை:

பழங்களை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.

நறுக்கிய பழத்தில் சிறிதை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதம் உள்ளதை மிக்ஸியில் போட்டு அடிக்கவும்.

அடித்த கூழை பாத்திரத்தில் கொட்டி, எடுத்து வைத்த துண்டுகளையும் சேர்த்து கை விடாமல் கிளரவும்.

கலவை பச்சை வாசம் போனதும் சர்க்கரை சேர்த்து கிளரவும்.

முதலில் நீர்க்கும், கொஞ்சம் நேரத்தில் கெட்டியாகி அல்வா பதம் வந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: