மாம்பழப் பொங்கல்

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி - 1/2 கிலோ

சர்க்கரை - 400 கிராம்

மாம்பழம் - 2

பால் - 4 கப்

முந்திரி - 10

திராட்சை - 10

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

நெய் - 1 கப்

செய்முறை:

அரிசியை 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த அரிசியுடன், தோல் சீவிய மாம்பழம், பால், தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்றாக குழைய வேக வைக்கவும்.

வேக வைத்த மாம்பழ சாதத்துடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.

ஒரு ஸ்பூன் நெய்யில், முந்திரி, திராட்சை, ஏலக்காயை வதக்கி, பொங்கலுடன் சேர்க்கவும்.

மீதமுள்ள நெய்யையும் சேர்த்து திரண்டு வரும் வரை கிளறி, இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: