ப்ரெட் கோகனட் ஹல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 10

தேங்காய் துருவல் - 3/4 கப்

சர்க்கரை - 3/4 கப்

நெய் - தேவைக்கேற்ப

முந்திரி - 10

செய்முறை:

ப்ரெட் ஸ்லைஸை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும். பின் கனமான கடாயில் நெய் விட்டு நன்கு மொறு மொறுப்பாகும் வரை வறுக்கவும்.

வறுத்த பின் தனியே வைக்கவும். பின் சிறிது நெய் விட்டு முந்திரியையும், தேங்காயையும் வறுக்கவும்.

கடாயில் சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரையை போடவும். சர்க்கரை கரைந்த பின் வறுத்த பொருட்கள், நெய் விட்டு கைவிடாமல் கிளறவும். ஒட்டாத பதம் வந்த பின் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: