ஆப்பிள் அல்வா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துருவிய ஆப்பிள் - 2 கப்

கோதுமை மாவு - 2 கப்

நெய் - 100 மில்லி

ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

சீனி - 4 கப்

பால் - 1/4 லிட்டர்

முந்திரிப் பருப்பு - 5

கேசரி பவுடர் - 2 சிட்டிகை

செய்முறை:

பாலில் துருவிய ஆப்பிளை போட்டு நன்கு வேகவிடவும்.

நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும்.

ஒரு அடிக்கனமான வாணலியை அடுப்பில் வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கேசரி பவுடரை கரைத்து, அதில் மசித்த ஆப்பிள் மற்றும் கோதுமை மாவினைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

பிறகு சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கலந்து கிளறவும்.

அல்வா பதம் வந்ததும் ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கி முந்திரி பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும்.

குறிப்புகள்: