பிரான் சம்பல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 1/2 கிலோ

வெங்காயம் - 2

பூண்டு - 4 பல்

மிளகாய் - 10

எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி

சர்க்கரை - 1 தேக்கரண்டி

மல்லி இலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி சேர்த்து சிறிது எண்ணெயில் வேக வைக்கவும்.

மிளகாயை காம்பு நீக்கி, விதைகளை ஓரளவு நீக்கி விட்டு நீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்.

ஊறிய மிளகாயுடன், நறுக்கிய வெங்காயம், பூண்டுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.

உப்பு, சர்க்கரை எலுமிச்சைச்சாறை சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.

எண்ணெய் பிரிந்ததும் வேக வைத்த இறாலை சேர்த்துக் கிளறி மல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

சப்பாத்தி போன்ற டிபன் வகைகள் மட்டுமல்ல சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.