வேலூர் மீன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் (தேங்காய் பாறை, கொடுவா, வஞ்சிரம், வாவல், சங்கரா, ஐலா, சுதும்பு, அல்லது வறால்) - 1/4 கிலோ

சாம்பார் வெங்காயம் - 10

தக்காளி - 2

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

தனியாத் தூள் - 4 தேக்கரண்டி.

தேங்காய் துருவியது - 3 தேக்கரண்டி.

புளி - எலுமிச்சை அளவு.

எண்ணெய் - 50 மில்லி.

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

வடகம் (அல்லது) வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

வெங்காயம் பொடியாக அரிந்தது - 3 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து.

கொத்தமல்லித் தழை - சிறிதளவு.

செய்முறை:

மீனை நன்கு சுத்தம் செய்து விட்டு, மஞ்சள் தூள் கொஞ்சமும், மிளகாய்த் தூள் கொஞ்சமும், உப்பு சிறிதும், எலுமிச்சைச் சாறு 1/2 ஸ்பூனும் சேர்த்து மீனை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

மிக்ஸியில் சாம்பார் வெங்காயம், தேங்காய், ஒரு தக்காளி இவைகளைப் போட்டு நன்கு அரைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு இவைகளைக் கலந்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

தக்காளியை பொடிதாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்புசெய்து, பொடியாக வெட்டிய தக்காளி, கறிவேப்பிலை இவைகளை வதக்கி, மசாலா கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.

கொதித்த உடன் மீன் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் கொதித்த பிறகு, கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம்.

குறிப்புகள்: