வறுத்தரைத்த செம்மீன் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 15

தேங்காய் துருவல் - 1 கப்

இஞ்சி, பூண்டு விழுது - 3/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

நறுக்கிய சின்ன வெங்காயம் - 4

கறிவேப்பிலை - 10 இலை

செய்முறை:

தேங்காய் துருவலை பரந்த குக்கரில் போட்டு நன்கு வறுத்து ப்ரவுன் கலருக்கு வர வேண்டும்.(தேங்காய் ஓடு நிறத்துக்கு). பின் மை போல அரைத்துக் கொள்ளுங்கள்.

பின் தாளிக்க கொடுத்துள்ள இறால் தவிர மற்ற பொருட்களுடன் தேங்காய் விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

கொதி வந்ததும் இறால் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதித்தால் போதும். கடைசியில் எண்ணெயில் வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டுங்கள்.

குறிப்புகள்: