மெட்ராஸ் மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
பச்சை மாங்காய் - 2
வெங்காயம் - 1
சாம்பார் வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
முழுப்பூண்டு - 1
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கட்டு
எண்ணெய் - 1/2 கோப்பை
உப்பு - நான்கு தேகரண்டி
செய்முறை:
மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
தேங்காயுடன் பச்சைமிளகாய், சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை வைத்து மையாக அரைத்து கொள்ளவும்.
தக்காளி வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி காய்ந்த பிறகு கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு வறுக்கவும்.
பிறகு பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி எல்லாத்தூள் வகைகளையும் போட்டு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
பிறகு தேங்காய் விழுதை போட்டு சிறிது நேரம் வதக்கி இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றி நன்கு கலக்கி விடவும். பிறகு மாங்காயையும் உப்பையும் போட்டு கொதிக்க விடவேண்டும்.
குழம்பு கரண்டியில் ஒட்டும் பதம் வந்தவுடன் மீனைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
நன்கு ஆறவைத்து சூடான சோற்றுடன் பரிமாறவும்.