மீன் தேங்காய்பால் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 6

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி

மல்லி தூள் - 1 1/2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கொடம் புளி - 3 அல்லது நெல்லிக்காய் அளவு புளி

தேங்காய் பால் - 1/2 கப்

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 4 இனுக்கு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கவும்.

குழம்பு செய்யும் பாத்திரத்தில் பாதியளவு இஞ்சி பூண்டு விழுது, பாதியளவு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, இரண்டாக கீறிய பச்சை மிளகாய், ஊறவைத்த கொடம்புளி (இல்லையென்றால் புளிக்கரைசல்), 2இனுக்கு கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பாதியளவு வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி மீதமுள்ள மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பொடி வாசனை குறைந்ததும் தேங்காய்பால், சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் இந்த கலவையை வெந்து கொண்டிருக்கும் மீனோடு சேர்க்கவும்.

எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: