மீன் குழம்பு

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மீன் (ஏதேனும் ஒரு வகை) - 1/2 கிலோ

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 2

பூண்டு - 6 பல்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

மிளகு, சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

தயிர் - 1/2 கப்

புளிக்கரைசல் - 1 கப்

தேங்காய் - 3

கடுகு - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனைச் சுத்தம் செய்து உப்புத் தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுரித்து நசுக்கி வைக்கவும்.

தக்காளியுடன் ஒரு பச்சை மிளகாய் மற்றும் தேங்காயைச் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நசுக்கிய பூண்டு, கடுகு, வெந்தயம், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி, தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு தூள் வகைகள் மற்றும் தயிர் சேர்த்து பிரட்டவும்.

அதனுடன் மீனைச் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, கொத்தமல்லித் தழை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்புச் சேர்த்து சிறு தீயில் வைத்து குழம்பு கெட்டியாகும் வரை (10 நிமிடங்கள்) கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சிறிய மீன் வகையாக இருந்தால், குழம்பு கொதித்தவுடன் மீனைச் சேர்க்கவும்.