மட்டன் குழம்பு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 1

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 12

இஞ்சி - ஒரு துண்டு

தக்காளி - 1

அரைக்க:

தேங்காய் (முக்கால் தேங்காய்) - 1 கப்

மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி அல்லது காரத்திற்கேற்ப

மல்லித் தூள் - 4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - தேவைக்கு

சோம்பு - 1/2 தேக்கரண்டி

பட்டை - 4 துண்டு

கிராம்பு - 5

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

கறியை சுத்தமாக கழுவி குக்கரில் போட்டு நான்கு டம்ளர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி எண்ணெய், மஞ்சள் தூள் சிறிதளவு, மிளகாய் தூள் சிறிது, சின்ன வெங்காயம், பூண்டு சிறிது, இஞ்சி தட்டியது, உப்பு கொஞ்சம் சேர்த்து நான்கு விசில் வைத்து வேக வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.

அதில் பெரிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வேக வைத்த கறி தண்ணீரில் அரைத்த தேங்காய் விழுது, தாளித்த பொருளை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைக்கவும். (தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்)

குறிப்புகள்:

இது சுடு சாதம், சப்பாத்தி, பரோட்டா, இட்லிக்கு பொருத்தமாக இருக்கும்.