பூண்டு முட்டை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முழுப்பூண்டு - 1 (15 பல் இருக்கலாம்)

முட்டை - 2

வெங்காயம் - 1

தக்காளி - 2

மிளகாய் - 1

குழம்பு மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி.

கடுகு, உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - கொஞ்சம்

தேங்காய் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பூண்டுப்பல் பெரியதாக இருந்தால் நீளவாக்கில் கட் பண்ணிக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி சிறியதாக கட் பண்ணிக்கொள்ளவும். மிளகாய் கீறிக்கொள்ளவும். தேங்காய் அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, தாளித்து வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வெந்தவுடன் தக்காளி சேர்த்து மசிந்தவுடன், உப்பு, குழம்பு மிளகாய்த்தூள் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

மசாலா வாடை அடங்கியவுடன் தேங்காய் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து கொதி வந்தவுடன் முட்டை உடைத்து ஊற்றி முட்டை வெந்தவுடன் இறக்கவும்.

கொத்தமல்லி இலை சிறியதாக கட் பண்ணி தூவி பரிமாறவும்

குறிப்புகள்: