நெத்திலி மீன் திதிப்பு (1)
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் - 1/4 கிலோ
வெங்காயம் - 1 பெரிது
தக்காளி - 2 பெரிது
பச்சை மிளகாய் - 4
சாம்பார் பொடி - 5 தேக்கரண்டி
தேங்காய் பொடியாக நறுக்கியது - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
பட்டை, லவங்கம், சோம்பு - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நெத்திலியை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு கலந்து பிரட்டி வைக்கவும்.
தேங்காயை நைசாக அரைத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம் தாளிக்கவும்.
இதில் கறிவேப்பிலை சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைந்து வந்ததும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விட்டு மசாலா வாசம் போக கொதிக்க விடவும்.
இதில் மீனை சேர்த்து வேக விட்டு பின் கடைசியாக தேங்காய் அரைத்ததை ஊற்றி ஒரு கொதி விட்டு எடுக்கவும்.