நெத்திலி மீன் குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் - 1/2 கிலோ
நறுக்கிய சிறிய வெங்காயம் - 150 கிராம்
நறுக்கிய தக்காளி - 4
பச்சைமிளகாய் - 1
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 7 என்னம்
தேங்காய் பால் - 1 கப்
புளி ( நீரில் கெட்டியாக கரைக்கவும்) - எலுமிச்சை அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் தூள் - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 மேசைக்கரண்டி
தனியா தூள் - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை சுத்தம் செய்து லேசாக உப்பு,மஞ்சள் தூள் தூவி பிசிறி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்லவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி சோம்பு,வெந்தயப் பொடி,பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு போட்டு இதனுடன் இஞ்சி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் கரைத்த புளியை ஊற்றவும்.பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், தனியா தூளை சேர்த்து எண்ணைய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
இந்த கலவையுடன் தேங்காய் பாலை சேர்த்து கொஞ்சநேரம் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவும்.
மீன் 2 /3 கொதியில் வெந்துவிடும்.
குழம்பு வெந்து இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் தட்டி போட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். (ருசிக்காக)
பறிமாறும் முன் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறவும்.