தேங்காய் பால் கறி குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டின் தொடைக்கறி - 400 கிராம்

தேங்காய் - 1

கறி மசாலா - 1 தேக்கரண்டி

மிளகு - 25 கிராம்

பூண்டு - 10 பல்

நெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறியை துண்டுகளாக்கி நறுக்கி கழுவி பிழிந்து நீரைவடித்து விட்டு ஒரு தனி பாத்திரத்தில் வைக்கவும்.

தேங்காயை உடைத்து ஒரு மூடியை திக்கான பால் எடுத்து வைக்கவும், அடுத்த மூடியை அரைத்து வைக்கவும்.

பூண்டை தோலுரித்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நெய்யை விட்டு காய்ந்ததும் பூண்டு பற்களை போட வேண்டும்.

பூண்டு லேசாக சிவந்து வரும் போது கறியை போட்டு நன்றாக கிளறவேண்டும்.

கறியின் நிறம் மாறும் அப்போது கறி மசாலா, மிளகுத்தூள், மற்றும் அரைத்து வைத்திருக்கும் தேங்காயையும் போட்டு கிளறி தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.

கறி வெந்தபின் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விட்டு தேங்காய் பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

சுவையான தேங்காய் பால் கறிக் குழம்பு ரெடி.

குறிப்புகள்: