சேலம் மட்டன் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு இறைச்சி (மட்டன்) - 3/4 கிலோ

சின்ன வெங்காயம் - 1/2 கிலோ

தேங்காய் - 1 மூடி

இஞ்சி - 2 அங்குல துண்டு

பூண்டு - 15 + 10 பல்

காய்ந்த மிளகாய் - 10

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 2 மேசைக்கரண்டி

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

பட்டை - சிறிது

கிராம்பு - 3

ஏலக்காய் - 2

பிரிஞ்சி இலை - சிறிது

கறிவேப்பிலை - 20

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பூண்டினை நறுக்கி கொள்ளவும், தேங்காயை துருவி வைக்கவும். 15 பல் பூண்டு, இஞ்சியை அரைத்து வைக்கவும்.

ஆட்டு இறைச்சியை கழுவி சிறிது உப்பு, மஞ்சள் தூள், பாதி இஞ்சி பூண்டு விழுது, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அவன் பாத்திரத்தில் போட்டு 15 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

வேறு ஒரு மைக்ரோ பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய், பாதி கறிவேப்பிலை, சீரகம், மிளகு போட்டு 2 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும்.

பின்னர் 5 வெங்காயத்தை மட்டும் தனியாக வைத்துக் கொண்டு, மீதி வெங்காயத்தை அதில் போட்டு 2 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும். வதக்கியதை தனியாக எடுத்து அதனுடன் தனியா தூள் சேர்த்து அரைத்து வைக்கவும்.

அதே பாத்திரத்தில் சிறிது பட்டை, 1 கிராம்பு, சோம்பு, கசகசா போட்டு 2 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும். பிறகு அதில் தேங்காய் சேர்த்து 2 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும். வறுத்தவைகளை தனியாக அரைத்து வைக்கவும்.

மைக்ரோ பாத்திரத்தில் மீதி எண்ணெயை விட்டு 1 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும். அதில் மீதி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து 2 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும்.

வெளியில் எடுத்து இரண்டாக வெட்டிய 8 வெங்காயம், பூண்டு, மீதி உள்ள இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி, மீதி கறிவேபிப்பிலை சேர்த்து 1 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும்.

அத்துடன் ஆட்டு இறைச்சி, முதலில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி 5 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும்.

பிறகு வெளியில் எடுத்து அரைத்த தேங்காய், கசகசா விழுதை கெட்டியாக கரைத்து ஊற்றி 5 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: