சென்னை சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தேங்காய் - 2 பத்தை
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 8 பல்
தக்காளி - 4
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி - 2 கொத்து
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
தூள் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி மற்றும் பூண்டை தோல் நீக்கி தட்டி வைத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை மையாக அரைத்து எடுக்கவும்.
சுத்தம் செய்த சிக்கனை தயிர் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
பிறகு தட்டி வைத்திருக்கும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக 5 நிமிடம் வதக்கவும்.
அதில் ஊற வைத்திருக்கும் சிக்கனை போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு போட்டு ஒரு முறை கிளறி விடவும்.
அதன் பிறகு தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 17 நிமிடம் வேக விடவும்.
நன்கு வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு சற்று திக்கானதும் 2 கொதி வந்ததும் புளி தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.