சுறாமீன் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுறாமீன் - 1/2 கிலோ

புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு

மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 3 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 8 பல்

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சுறாமீன் துண்டுகளை கழுவி சுத்தப்படுத்தவும். புளியை கரைத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்க்கவும்.

மிளகு, பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக நுணுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

கரைத்து வைத்திருக்கும் குழம்பை ஊற்றவும். குழம்பு கொதி வந்ததும் மீன் துண்டங்களை போடவும்.

குழம்பு நன்றாக கொதித்து மீன் வெந்ததும் நுணுக்கி வைத்திருக்கும் மிளகு, பூண்டுப்பல்லை சேர்க்கவும். மேலும் 10 நிமிடம் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: