சுறாமீன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுறாமீன் - 2 (1/2 கிலோ)

புளி - எலுமிச்சை அளவு

வெங்காயம் - 50 கிராம்

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 3

மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி

மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

\எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

பிறகு மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள் போட்டு, சோம்பு, சீரகம், மிளகு அரைத்து ஊற்றவும்.

புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பிறகு மீனை கழுவிப்போட்டு வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: