சிக்கன் குழம்பு (7)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 500 கிராம்

வெங்காயம் - 2

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 20 பல்

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 5

சிக்கன் மசாலா - 50 கிராம்

வரமிளகாய் பொடி - 2 தேக்கரண்டி

கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க

செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் இவைகளை பொடியாக நறுக்கி எண்ணெய் விட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

சற்று நேரம் ஆற விட்டு பின் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையை கோழிக்கறியுடன் கலந்து, மூன்று கப் தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.

பின் வெந்து கொண்டிருக்கும் கலவையுடன் சிக்கன் மசாலா, வரமிளகாய் பொடி இவைகளையும் சேர்க்கவும். பின் 15 நிமிடம் கொதிக்க விட்டு, கறி வெந்து, கெட்டியாக குழம்பு பதம் வந்தவுடன் தாளித்துக் கொட்டி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: