கேரளா நாடன் கோழிக்கறி
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
சோம்பு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
செய்முறை:
முதலில் தேங்காய் எண்ணெயை காயவைத்து அதில் சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை தேவையென்றால் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
சாதாரண குழம்புக்கு செய்வது போல் அல்லாமல் நன்கு கிளற கிளற வெந்து ப்ரவுனாக குழைந்து வர வேண்டும்.
பிறகு இஞ்சி, பூண்டு சேர்த்து கிளறி தீயை குறைத்து 3 நிமிடம் மூடி வைத்து வேறு வேலையை கவனிக்கவும்.
இப்பொழுது பச்சை வாடை அடங்கியதும் தக்காளி, மிளகாய், மஞ்சள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
தக்காளி வெந்து மசிந்து மசாலா போல வந்ததும் சிக்கன் துண்டுகள் சேர்த்து கிளறி மூடி போட்டு விடவும்.
5 நிமிடம் தீயை கூட்டி வைத்து ஒரு கிளறு கிளறி பின் தீயை குறைத்து விட்டு 40 நிமிடங்கள் அப்படியே விடவும். 10 நிமிடத்திற்கொருமுறை கிளறி விடவும்.
வெந்த குழம்பில் தேவைக்கு சிறிது தண்ணீர் தெளிக்கலாம். கடைசியாக தீயை அணைத்து விட்டு தேங்காய் எண்ணெயை காயவைத்து வெந்தயம், சின்ன வெங்காயம் சேர்த்து மொறுக விட்டு தாளித்து குழம்பில் கொட்டவும்.