கெண்டை மீன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கெண்டை மீன் - 1/2 கிலோ

பூண்டு - 12 பல்

பச்சை மிளகாய் - 6

மீன் மசாலா தூள் - 3 மேசைக்கரண்டி

தக்காளி - 3

மாங்காய் - பாதி

வடகம் - 1 தேக்கரண்டி

புளி - சிறிய எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். மாங்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து 1 1/4 கப் புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

பூண்டு மற்றும் பச்சை மிளகாயை அம்மியில் வைத்து தட்டி வைத்துக் கொள்ளவும்.

கரைத்து எடுத்து வைத்திருக்கும் புளிக்கரைசலுடன் மீன் மசாலா தூள், உப்பு, தட்டி வைத்திருக்கும் பூண்டு பச்சை மிளகாயை தாளிக்க 5 பல் பூண்டை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு மற்றதை போட்டு அதனுடன் தக்காளியை பிசைந்து விட்டு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் தாளித்து அதில் எடுத்து வைத்திருக்கும் பூண்டை போட்டு வதக்கவும்.

அதனுடன் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசல் கலவை ஊற்றி கிளறி விடவும்.

அதில் மீன் துண்டுகளை போட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்.

பிறகு 5 நிமிடம் கழித்து தீயை குறைத்து வைத்து மாங்காய் துண்டுகளை போட்டு ஒரு முறை கிளறி விட்டு மூடி விடவும்.

பிறகு 8 நிமிடம் கழித்து கொதித்ததும் திறந்து கிளறி விட்டு இறக்கி வைத்து பரிமாறவும்.

சுவையான கெண்டைமீன் குழம்பு தயார்.

குறிப்புகள்: