கிராமிய கோழி குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி கறி - 1/2 கிலோ

பூண்டு - ஒரு வில்லை

இஞ்சி - ஒரு வில்லை

சிறிய வெங்காயம் - கைப்பிடி

தக்காளி - 1

தேங்காய் - இரு துண்டுகள்

பச்சை மிளகாய் - தேவைக்கு

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

பொடி வகை:

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

மிளகாய் பொடி - தேவைக்கு

மல்லி பொடி - 1/2 தேக்கரண்டி

வறுத்து அரைக்க:

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

மல்லி விதை - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 1

பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

அரிசி - 1 தேக்கரண்டி

சோம்பு - ஒரு கிள்ளு

பெரிய வெங்காயம் - பாதி

செய்முறை:

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி பூண்டினை இடித்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும்.

கடைசியாக வெங்காயம் சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்க்கவும்.

வறுத்தவை ஆறியதும், தேங்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின் மீண்டும் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பின், இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் சேர்க்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

தக்காளியை சேர்த்து குழையும்படி வதக்கவும். பொடி வகைகளை சேர்த்து கிளறவும்

கோழி துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறி விடவும்.

கறி நீர் விடத் தொடங்கியதும், அரைத்த விழுதை சேர்க்கவும்.

மீண்டும் சுமார் ஐந்து நிமிடம் கழித்து இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். சிக்கன் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

கிராமிய முறைப்படி செய்துள்ள சுவையான சிக்கன் குழம்பு இது.

குறிப்புகள்:

கிரேவி போல அல்லாமல் குழம்பு தண்ணியாக இருக்க வேண்டும்.

தோசை, இட்லிக்கு பொருந்தும். இட்லிக்கு பிரமாதமாக இருக்கும்.

கறிவேப்பிலை மற்றும் மல்லித் தழை சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

தாளிக்க சின்ன வெங்காயம் தான் நன்றாக இருக்கும்.