கிராமத்து கோழிக் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

வெங்காயம் பெரியது - 1 (அல்லது) 10 சின்ன வெங்காயம்

தக்காளி - 1

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது

கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க

மிளகாய் வற்றல் - 8

தனியா - 1 மேசைக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

பட்டை, லவங்கம் - சிறிது

கசகசா - 1 தேக்கரண்டி

தேங்காய் பொடியாக நறுக்கியது - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நுறுக்கி கொள்ளவும்.

சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தனியா, மிளகாய் வற்றல், மிளகு இவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.

அதில் சிக்கன், மஞ்சள் தூள், உப்பு முதலியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சிறிது நேரம் வேக விடவும்.

வறுத்து வைத்த பொருட்களுடன் தேங்காய், பட்டை, லவங்கம், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை சிக்கனில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் கறிவேப்பிலையை எண்ணெயில் வறுத்து சேர்க்கவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்க்கவும். இப்போது கமகமக்கும் கிராமத்து கோழிக் குழம்பு தயார்.

குறிப்புகள்:

இது சூடான சாதம், இட்லி, தோசை, பூரி எல்லாவற்றிற்கும் சரியான ஜோடி.