கலவை மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
சங்கரா, ஊடம் காரப்பொடி, பாறை மீன் எல்லாம் சேர்ந்து - 1/2 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிது
நறுக்கின வெங்காயம் - சிறிது
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
சீரகத்தூள் - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை நறுக்கி சுத்தப்படுத்தி வைக்கவும்.
சீரகத்தை கடாயில் வறுத்து அதனுடன் வெங்காயம், இரண்டு தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
புளியை கரைத்து அதனுடன் மல்லித்தூள், உப்பு, மல்லி இலை, ஒரு தக்காளி சேர்த்து பிசைந்து கரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.
அதனுடன் மிளகாய்தூள் மற்றும் அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் புளிக்கரைசலை கடாயில் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும். அதன் பிறகு மீனை போட்டு ஒரு கொதி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.