கறி கடலைப்பருப்பு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறி - 1/4 கிலோ

கடலைப்பருப்பு - 100 கிராம்

சின்ன வெங்காயம் (அல்லது) வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

பச்சைமிளகாய் - 3

மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி

மல்லிப்பொடி - 3 தேக்கரன்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

சீரகம், சோம்புத்தூள் - 1 மேசைக்கரண்டி

பூண்டு - 6 பல்

இஞ்சி - சின்ன துண்டு

தேங்காய் - 4 சில்

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

சோம்பு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

பட்டை - 1

அன்னாசிப்பூ - 2

கல்பாசி - 2

கறிவேப்பிலை, மல்லித்தழை - ஒரு கொத்து

செய்முறை:

குக்கரில் கறியை கழுவிப்போட்டு, கடலைப்பருப்பு 10 வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி போட்டு, பச்சைமிளகாய் கீறிப் போட்டு, மஞ்சள்தூளுடன், சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கடைசியாக பூண்டு, இஞ்சி, 5 வெங்காயம் அரைத்து போட்டு, மிளகாய்பொடி, மல்லித்தூள், உப்பு 4 கிளாஸ் தண்ணீர் விட்டு 5 விசில் வைத்து, சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து மீதி வெங்காயத்தை நறுக்கி போட்டு கருவேப்பிலை போட்டு வதங்கியவுடன் குழம்பில் கொட்டவும்.

தேங்காயுடன் 2 பூண்டு பல் சேர்த்து மையாக அரைத்து குழம்பில் ஊற்றி கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: