ஈஸி மீன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் துண்டுகள் - 6

புளி - எலுமிச்சை அளவு

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 மேசைக்கரண்டி

சீரகம் - 1/2 மேசைக்கரண்டி

நான்காய் நறுக்கிய தக்காளி - பாதி

நீளமாய் நறுக்கிய பச்சை மிளகாய் - 3

மிளகாய் பொடி - 1 1/2 மேசைக்கரண்டி

தனியாத் தூள் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி

கடுகு - சிறிது

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - ஒரு மூடி

பெரிய வெங்காயம் - பாதி

தக்காளி - பாதி

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். அரைக்க வேண்டியவற்றை அரைத்துக் கொள்ளவும்.

மீனை மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பொடியாய் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

பின் அரைத்து வைத்தவற்றை போட்டு பச்சை வாசம் போகும்படி வதக்கவும்.

பின் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் மீனை போட்டு தேவையான உப்பு சேர்த்து தூள் வகைகளை போடவும்.

10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாயை போட்டு மூடி வைக்கவும். அந்த சூட்டிலேயே அவை இருக்கட்டும். சுவையான குறைந்த பொருட்களை கொண்ட எளிதான மீன் குழம்பு ரெடி.

குறிப்புகள்:

வேண்டுமெனில் மல்லித் தழை தூவலாம்.